திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சத்தமே இல்லாமல் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்த கவின்; காதலியை மகிழ்ச்சியாக கரம்பிடித்தார்.!
தமிழ் திரையுலகில் பல சோதனைகளை கடந்து சாதனைகளை சந்தித்துவரும் நடிகர் கவின். இவரின் நடிப்பில் வெளியான படங்கள் முதலில் தோல்வியை சந்தித்தாலும், இறுதியாக காதலை மையப்படுத்தி நடித்த தடா திரைப்படம் நல்ல வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது.
நடிகர் கவின் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த மோனிகா என்ற பெண்மணியை காதலித்து வந்தது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று. இவர்களின் திருமணம் விரைவில் கைகூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நடிகர் கவினின் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் இன்று சென்னையில் இருக்கும் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த திருமணத்தில் அவரின் நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் நேரில் கலந்துகொண்டு தங்களின் வாழ்த்துக்களை பதிவு செய்தனர்.