"இந்த விஷயத்தில் தமிழ் ஹீரோக்களை பின்னுக்கு தள்ளிய மகேஷ் பாபு!" எதில் தெரியுமா!?



Actor Mahesh babu followers details

தென்னிந்திய திரைத்துறையில் குடிப்பாக தெலுங்கு சினிமாவில் ஆக்ஷன் படங்களுக்கு மவுசு அதிகம். இது அந்தக்காலம் தொட்டே உள்ள நடைமுறை. தெலுங்கில் பல முன்னணி நடிகர்களும் இந்த முறையில் ஆக்ஷன் படங்களில் நடித்து வருகின்றனர். அந்தவகையில் அவர்களுள் முக்கியமானவர் மகேஷ் பாபு. 

tollywood

இவருக்கென்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மொழி தாண்டி இவரது படம் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாவதுண்டு. அப்படி ரீமேக் செய்யப்படும் மகேஷ் பாபுவின் படங்களில் தமிழில் விஜய் தான் பெரும்பாலும் நடிப்பார். இருவருமே ஆக்ஷன் மற்றும் டான்ஸ் இரண்டிலும் கலக்கி வருகின்றனர். 

சமூக வலைத்தளங்களிலும் பல பாலோர்கள் உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் தான் விஜய் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினார். அவர் பதிவிட்ட முதல் போட்டோவுக்கே 4 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்தன. மேலும் 3.9 மில்லியன் பாலோயர்களை ஒரே நாளில் பெற்றார் விஜய்.

tollywood
 

ட்விட்டரில் விஜய்க்கு 4.7 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். 2018ஆம் ஆண்டு இன்ஸ்டா தொடங்கிய மகேஷ் பாபுவுக்கு 12.2 மில்லியன் பார்வையாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. ட்விட்டரில் 13.1 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். அந்தவகையில் தற்போது மகேஷ் பாபு தான் முதலிடத்தில் உள்ளார்.