மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல நடிகர் மாறன் கொரோனாவால் மரணம்.! சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்.!
செங்கல்பட்டு நத்தம் பகுதியில் வசித்து வந்த திரைப்பட துணை நடிகர் மாறன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.
நடிகர் விஜய் நடித்த குருவி, கில்லி உள்ளிட்ட படங்களில் அவருக்கு நண்பராக சிறு வேடங்களில் நடித்தவர் நடிகர் மாறன். அந்த படங்களை தொடர்ந்து மேலும் சில தமிழ் படங்களில் அவர் நடித்துள்ளார். செங்கல்பட்டு நத்தம் பகுதியில் வசித்து வந்த துணை நடிகர் மாறனுக்கு கடந்த சில நாடகளுக்கு முன் கொரோனா தொற்று உறுதிசெய்யபட்டது.
இதனையடுத்து அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஏற்பட்ட நடிகர் மாறன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.
பல படங்களில் வில்லன் மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த மாறன், கானா பாடல்களையும் மேடை கச்சேரிகளில் பாடி வந்துள்ளார். நடிகர் மாறன் மறைவுக்கு திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கொரோனா தொற்றால் திரையுலகினர் அடுத்தடுத்து மரணம் அடைவது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.