#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"இந்தாம்மா ஏய்" இனி இல்லை.. பேச்சற்ற உடலை கண்டு கதறி அழும் எதிர்நீச்சல் டீம்.! #RIP_ActorMarimuthu !
தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கி இயக்குனராக இருந்து பின் நடிகரானவர் மாரிமுத்து. தேனி மாவட்டம் பசுமலை பகுதியைச் சேர்ந்த இவர் ஆசை, வாலி நேருக்கு நேர், இருவர் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். மேலும் கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
மிஸ்கின் இயக்கத்தில் உருவான யுத்தம் செய் என்ற திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள், டாக்டர் மற்றும் சமீபத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்ற ஜெயிலர் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
இவர் சன் டிவியில் இரவு 9:30 மணிக்கு வெளியாகும் எதிர்நீச்சல் என்ற தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த கதாபாத்திரம் சின்னத்திரை ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை இவருக்கு பெற்று தந்தது. இவரது எதார்த்தமான நடிப்பு மற்றும் முகபாவனைகள் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்தது.
இந்நிலையில் இன்று காலை டப்பிங் பேசிவிட்டு வீடு திரும்பிய அவர்8:30 மணி அளவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரது உடலானது பொதுமக்களின் அஞ்சலிக்காக விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று இரவு அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு நாளை மாலை இறுதிச் சடங்கு நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த நடிகர் நடிகைகள் அவரது உடலை பார்த்து கதறி அழுதது அனைவரின் நெஞ்சையும் கரைக்கும் வகையில் இருந்தது.