மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தங்க பதக்கங்களை குவித்து, இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் மாதவனின் தங்கமகன்.! குவியும் பாராட்டுக்கள்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்து ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் மாதவன். தற்போது அவர் தமிழில் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் ஒரு படத்திலும், சசிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகும் படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.
நடிகர் மாதவனின் மகன் வேதாந்த். நீச்சலில் அதிக ஆர்வம் கொண்ட அவர் சர்வதேச அளவில் பல போட்டிகளில் கலந்துகொண்டு ஏராளமான பதக்கங்களை குவித்து வருகிறார். இந்நிலையில் மலேசியா கோலாலம்பூரில் நடந்த மலேசியன் இன்விடேசனல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வேதாந்த் கலந்து கொண்டு 5 தங்க பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகர் மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடவுளின் கருணையாலும், உங்களது நல்வாழ்த்துகளாலும் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற மலேசியன் இன்விடேசனல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று வேதாந்த், இந்தியாவுக்காக 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் போட்டிகளில் 5 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். மகிழ்ச்சி, பெருமை அடைந்தேன். நன்றி என பதிவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து வேதாந்திற்கு சூர்யா, ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்ட பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.