மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"அஜித்திடமிருந்து அந்த விஷயத்தை மற்ற நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்" மீசை ராஜேந்திரனின் பரபரப்பு பேட்டி..
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் அஜித்குமார். இவரது ரசிகர்கள் அஜித்தை 'தல' என்று அன்போடு அழைப்பார்கள். கடைசியாக அஜித் நடித்து வெளிவந்த "துணிவு" திரைப்படம் 230கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
தொடர்ந்து லைக்கா நிறுவனத் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தன. பிறகு விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு, மகிழ்திருமேனி இயக்கப் போவதாகவும், படத்திற்கு "விடாமுயற்சி" என்ற தலைப்பு வைக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது.
ஆனாலும் 2,3 மாதங்கள் தாண்டியும் இந்த படத்தை பற்றி எந்த ஒரு அப்டேட்டும் இல்லாததால், படம் கைவிடப்பட்டதாக பலரும் கூறினர். இந்நிலையில், நடிகர் மீசை ராஜேந்திரன் அஜித் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
"ஹீரோயிசம் என்றால் அஜித்தை பார்த்து தான் மற்ற நடிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தன்னை பெயர் சொல்லிக் கூப்பிடவும், ரசிகர் மன்றம் வேண்டாம் என்றும் சொன்னவர் அஜித். 12 பேருக்கு வீடு கட்டி கொடுத்திருக்கிறார். என் படம் நல்லா இருந்தா பாரு என்று மட்டும் தான் சொல்வார்" என்று மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.