3வது பட்டத்தை பெற்றார் நகைச்சுவை நடிகர் முத்துகாளை; 58 வயதிலும் படிப்பை தொடர்ந்து சாதனை.!



Actor Muthukalai Get 3rd Degree in Tamil 

 

தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் முத்துக்காளை. கடந்த 1994-ம் ஆண்டு சண்டை கலைஞராக திரைத்துறையில் அறிமுகமான முத்துக்காளை, பின் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்களின் வரவேற்பு பெற்றார். 

தற்போது 58 வயதாகும் இவர், இளங்கலை தமிழ் இலக்கியத் தேர்வில் முதல்தர நிலையில் வெற்றி பெற்று தனது மூன்றாவது பட்டத்தினை பெற்றுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு பிஏ தமிழ் பட்டத்தை இரண்டாவது தர நிலையிலும், 2019-ல் எம்ஏ தமிழ் பட்டத்தை முதல் தரநிலையிலும் தேர்ச்சி பெற்றவர், தற்போது தனது மூன்றாவது பட்டத்தினையும் வெற்றிகரமாக பெற்றுள்ளார். 

தற்போது வரை 100 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள முத்துக்காளை, நடிகர் வடிவேலுவுடன் நடித்த காமெடி காட்சிகள் இன்று வரை பார்த்தால் சிரிப்பை ஏற்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.