திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
LCU குறித்து நடிகர் நரேன் வெளியிட்ட தகவல்.! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன் பாணியில் எடுக்கும் திரைப்படங்களை LCU , அதாவது 'லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்' என்று கூறுகின்றனர். லோகேஷ் LCU வின் கீழ் கமல் நடித்த விக்ரம் மற்றும் விஜய் நடித்த லியோ திரைபடங்களை இயக்கியிருந்தார்.
இதையடுத்து லோகேஷின் இயக்கத்தில் கைதி 2, விக்ரம் 2 மற்றும் லியோ 2 படங்கள் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அடுத்த ஆண்டு ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் இயக்கியுள்ளார் என்றும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் நரேன் ஒரு பேட்டியில், "நானும், லோகேஷ் கனகராஜும் இணைந்து இதில் LCUவை வைத்து ஒரு குறும்படம் எடுத்துள்ளோம். LCU எப்படி தொடங்கியது என்பது குறித்து இந்தக் குறும்படம் அறிந்து கொள்ளலாம். கைதி 2 படம் வெளியாவதற்கு முன்பே இந்தக் குறும்படம் வெளியாகும்.
மேலும் இந்தக் குறும்படம் ஏதேனும் ஒரு யூடியூப் சேனல் அல்லது ஓடிடியில் வெளியாகும்" என்றும் நரேன் கூறியுள்ளார். இந்த தகவலால் நடிகர் லோகேஷ் கனகராஜின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.