மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் விஜய்யுடன் 15 வருட பிரச்சினை.! அதற்கு நான் ரெடி.. அவர் ரெடியா? மனம் திறந்த பிரபல முன்னணி நடிகர்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன். அவர் தற்போது அமெரிக்காவில் செட்டிலாக்கியுள்ளார். மேலும் அவர் அங்கு விவசாயம் செய்வதும், அவரது வீட்டின் புகைப்படமும் இணையத்தில் பெருமளவில் வைரலானது. அதனைத் தொடர்ந்து நெப்போலியன் பல பேட்டிகள் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகர் விஜய்யுடனான பிரச்சனை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். போக்கிரி படத்தின் போது ஒரு சம்பவம் நடந்தது. அதனால் நானும் விஜய்யும் பேசிக் கொள்வதில்லை. அவரது படங்கள் எதையும் நான் பார்ப்பதில்லை. விஜய் பேச தயார் என்றால் நானும் ரெடி.
ஏனெனில் விஜய் அவரது அம்மா, அப்பாவிடமே பேசவில்லைனு சொல்றாங்க. அது உண்மையா? பொய்யா? என்று கூட எனக்கு தெரியாது. ஆனால் அமெரிக்கா வரை அந்த செய்தி பரவி உள்ளது. விஜய் முதலில் அவரது அம்மா, அப்பாவிடம் சமரசம் ஆகட்டும். அவருக்கும் எனக்கும் மோதல் ஏற்பட்டு 15 வருஷமாயிருச்சு. தற்போது அவர் என்னிடம் பேசுவதற்கு தயாராக இருப்பாரா என்று தெரியவில்லை. அவர் பேச ரெடி என்றால் நானும் ரெடி என்று நடிகர் நெப்போலியன் கூறியுள்ளார்.