நடிகர் நெப்போலியன் பிறந்து வளர்ந்த சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!



actor-nepolian-old-house-image-viral

தமிழில் புதுநெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். முதல் படத்திலேயே இளம் நாயகனாக இருந்த நெப்போலியன் வயதான கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார். அதனை தொடர்ந்து வில்லன், ஹீரோ என 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார். இப்படியாக ஏகப்பட்ட படங்களில் நடித்து பிரபலமான நெப்போலியன் அரசியலில் கால்பதித்து அமைச்சராக இருந்தார்.

Actor Nepolian

பின்னர் அமெரிக்காவில் செட்டிலான நெப்போலியன் சமீபத்தில் அமெரிக்காவில் நிலம் வாங்கி விவசாயம் செய்து வருவதாக தகவல் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது நடிகர் நெப்போலியன் பிறந்து வளர்ந்த சொந்த வீட்டின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.