#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் பாண்டியராஜன் வீட்டில் நடந்த கொண்டாட்டம்.! மகன்கள், பேரனுடன் ஒரே ஹேப்பிதான்! வைரல் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் பாண்டியராஜன். அவரது பெயரை சொன்னாலே முதலில் ரசிகர்களுக்கு நினைவில் வருவது அவரது திருட்டு முழிதான். இவர் முதலில் இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்தார். பின்னர் கன்னிராசி படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
தொடர்ந்து அவர் ஆண்பாவம், மனைவி ரெடி, நெத்தியடி, கபடி கபடி சில படங்களை இயக்கியுள்ளார். மேலும் அதனை தொடர்ந்து அவர் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்துள்ளார். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டு விளங்கும் பாண்டியராஜன் தற்போது சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
பாண்டியராஜன் 1986ஆம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் இயக்குனர் தயாரிப்பாளர், பாடலாசிரியரான அவிநாசி மணியின் மகள். பாண்டியராஜன் மற்றும் வாசுகிக்கு பல்லவராஜன், பிரித்திவ் ராஜன் , பிரேம்ராஜன் என மூன்று மகன்கள் உள்ளனர். பிரித்திவ் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாண்டியராஜன் தனது 38-வது திருமண நாளை மகன் மற்றும் பேரனுடன் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.