மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. அதிர்ஷ்டவசமாக நொடிப்பொழுதில் உயிர் தப்பிய நடிகர் பப்லு! பதறவைக்கும் திக்.. திக் வீடியோ!!
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து பிரபலமாக இருந்தவர் நடிகர் பப்லு பிரித்திவிராஜ். அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரது படங்களிலெல்லாம் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் வெள்ளித்திரை மட்டுமன்றி சின்னத்திரையிலும் மர்மதேசம், அரசி, வாணி ராணி என பல்வேறு தொடர்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
அவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் கண்ணான கண்ணே தொடரில் ஹீரோயினின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்கு தற்போது 55 வயது ஆகிறது. ஆனாலும் நடிகர் பப்லு ஏராளமான உடற்பயிற்சிகள், டயட் ஆகியவற்றைப் பின்பற்றி தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்ட போது பளு தூக்கும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது கவனக்குறைவால் எதிர்பாராத விதமாக வெயிட் இவரது கழுத்தில் விழுந்துவிட்டது.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நொடிப்பொழுதில் உயிர் தப்பிய இந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் ரசிகர்கள் பதறிப்போய் விசாரித்துள்ளனர். அதனைக் கண்ட நடிகர் பப்லு தனக்கு ஒன்றுமில்லை தான் நலமாக இருப்பதாக கூறியுள்ளார்.