திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"அன்பே மகளாக அருகிருக்க மனம் மணம் வீசுகிறது!" பார்த்திபன் நெகிழ்ச்சிப் பதிவு!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான படங்களுக்காக அறியப்பட்டவர் பார்த்திபன். இயக்குனராகவும், நடிகராகவும் உள்ள இவர், 1989ம் ஆண்டு "புதிய பாதை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானார். சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை இந்தப் படம் வென்றது.
சமீபத்தில் இவர் இயக்கி நடித்திருந்த "இரவின் நிழல்" திரைப்படமும் தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பதால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. நடிகை சீதாவை திருமணம் செய்துகொண்ட இவருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.
சீதாவை பிரிந்து வாழும் பார்த்திபன், 2018ம் ஆண்டு தனது மகள் கீர்த்தனாவிற்கு திருமணம் செய்துவைத்தது குறிப்பிடத்தக்கது. மகன், மகள் இருவருமே பார்த்திபனிடம் தான் இருக்கின்றனர். பார்த்திபனின் மகள் கீர்த்தனா, மணிரத்னத்தின் "கன்னத்தில் முத்தமிட்டால்" படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இந்நிலையில் பார்த்திபன் தற்போது தனது மகள் குறித்த கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கீர்த்தனாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து அத்துடன் "அன்பு மகளல்ல. அன்பே மகளாக அருகிருக்க.. மனம் மணம் வீசுகிறது" என்று குறிப்பிட்டுள்ளது ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்றுள்ளது.