திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பாகுபலி நடிகர் பிரபாஸிற்கு என்ன ஆச்சி.? வைரலாகும் செய்தியால் பரபரப்பு.!
2002ம் ஆண்டு "ஈஸ்வர்" படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபாஸ். 2004ஆம் ஆண்டு வெளியான "வர்ஷம்" திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார் பிரபாஸ். தமிழில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி 2 இரண்டு படங்களும் இவரை தமிழ் ரசிகர்களிடமும் சேர்த்துள்ளது.
இந்நிலையில், பிரஷாந்த் நீல் இயக்கும் "சலார்" திரைப்படத்தில் நடித்துள்ள பிரபாஸ், முழங்கால் அறுவை சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் ஐரோப்பா சென்று, மூன்று மாதங்கள் அங்கேயே தங்கி ஓய்வெடுத்து வந்த நிலையில், நேற்று ஹைதராபாத் திரும்பியுள்ளார் பிரபாஸ்.
இதனால் "சலார்" திரைப்படம் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ள நிலையில், விரைவில் இப்படத்தின் பிரமோஷன் பணிகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் டிசம்பர் முதல் வாரத்தில் படத்தின் டிரைலர் வெளியாகும் என்று தெரிய வந்தது.
கேங்ஸ்டர் ஆக்ஷன் படமாக உருவாகி வரும் சலார் திரைப்படம், வரும் டிசம்பர் 22ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தனது அடுத்த படமான "மாருதி" படத்தில் பிரபாஸ் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.