வாவ்.. செமையா இருக்கே! நடிகர் பிரபுதேவாவின் பிரமாண்ட வீட்டை பார்த்தீங்களா.! தீயாய் பரவும் புகைப்படம்!!



Actor prabudeva house images viral

தென்னிந்திய சினிமாவில் நடன இயக்குனராகவும், முன்னணி நடிகராகவும் வலம் வந்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் பிரபுதேவா. இவரது நடன திறமைக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் பலரும் அழைத்து வந்தனர். மேலும் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையே பெற்று வந்தது.

 சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த மைடியர் பூதம் திரைப்படம் குழந்தைகளை கவர்ந்தது. பிரபுதேவா கைவசம் தற்போது பகிரா, வினோதன், முசாசி, எங் மங் சங் போன்ற பல படங்கள் உள்ளன. இவர் 1995 ஆம் ஆண்டு ராம்லதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 3 மகன்கள் இருந்த நிலையில், மூத்த மகன் அவனது 12 வயதில் காலமானார்.

Prabhudevam

மேலும் பிரபுதேவா மனைவியை விவாகரத்து செய்து, நடிகை நயன்தாராவுடன் காதல் வயப்பட்டு பின்னர் சில காரணங்களால் இருவரும் பிரிந்ததும் பலரும் அறிந்ததே . பின்னர் பிரபுதேவா மருத்துவரான உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் என்ற தகவலும் வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது கேரியரில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வரும் பிரபுதேவாவின் பிரமாண்ட வீட்டின் சில புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Prabhudevam