திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சற்று முன்பு: பிரபல எழுத்தாளர், இயக்குனர், நடிகருமான பிரதாப் போத்தன் காலமானார்...
1980 களில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற பல மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரதாப் போத்தன். இவர் சிறந்த நடிகராக மட்டுமின்றி திரைக்கதை எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டு திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர்.
இவர் கீரின் ஆப்பிள் என்ற விளம்பர நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இவர் 1985 ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் அடுத்த ஆண்டே விவாகரத்து பெற்று பிரித்தார். அதன்பின் 1990ம் ஆண்டு அமலா சத்தியநாத்தை திருமணம் செய்து கொண்ட பிரதாப்புக்கு ஒரு மகள் உள்ளார்.
பின்னர் 2012ம் ஆண்டு அமலாவை விவாகரத்து செய்தார். இந்நிலையில் சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் தனிமையில் வசித்து வந்த பிரதாப் போத்தன் இன்று காலமானார். இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை பெறும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.