மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லியோ டிரைலர் சர்ச்சை வசனம் விவகாரம்; புகழ் தெரிவித்த நச் பதில்.. விபரம் உள்ளே.!
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்த பலரும், இன்று மக்களால் பெருவாரியாக அங்கீகரிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், நடிகர் புகழ் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக தமிழக மக்களிடையே நீங்காத இடத்தை பெற்றுவிட்டார்.
இவர் தனது காதலி பென்ஸியை கடந்த ஆண்டு திருமணம் செய்து, தற்போது தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று புகழ் கோவையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அவரின் பேட்டியில், "லியோ டிரைலரில் உள்ள நல்ல விஷயத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். கெட்ட விஷயத்தை நீங்கள் ஏன் கவனிக்க வேண்டும். அந்த டிரைலர் சர்ச்சை விவகாரம் குறித்து எனக்கு தெரியாது. நான் எனது மகளுடன் விளையாடிக்கொண்டு இருப்பதால், டிரைலரை நான் இன்று வரை பார்க்கவில்லை.
அடுத்தபடியாக ஜெண்டில்மேன் 2 உட்பட 4 படங்களில் பணியாற்றி வருகிறேன். கஷ்டப்பட்டு உழைத்தவர்களுக்கு பலன் கிடைக்க வேண்டும். எங்களை போன்றவர்களை மக்கள் அங்கீகரிப்பது மகிழ்ச்சியே. அவை தொடர வேண்டும். பலரும் முன்வரவேண்டும்.
நடிகர் சந்தானத்துடன் காமெடி திரைப்படங்களில் விரைவில் நடிக்கவுள்ளேன். நாம் நமது வேலையை செய்தோமேயானால், நமக்கான ஒரு இடம் கிடைக்கும். எதிர்மறை கருத்துக்கள் வந்தாலும், அதனை கண்டுகொள்ளாமல் உழைக்க வேண்டும். அவர்களின் கருத்தும் ஒருநாள் நேர்மறையாக மாறும்" என பேசினார்.