"காந்தியும், பாரதியும் இந்தியர்களே இல்லை., பிரிட்டிஷ் குடிமகன்கள்" - வெற்றிமாறனின் கருத்துக்கு நடிகர் ராகவ் காரசாரமாக பதில்..!!



Actor ragav speech about rajarajacholan

 

தமிழில் ஆடுகளம், அசுரன், விசாரணை, பொல்லாதவன், வடசென்னை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "இராஜராஜசோழன் இந்துவே கிடையாது. நம்மிடம் இருந்து அடையாளத்தை பறித்துக் கொண்டிருக்கின்றனர்" என்று கூறியிருந்தார். 

இந்த கருத்துக்கு நடிகர்கள் முதல் பலர் எதிர்ப்பும், சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இக்கருத்துக்கு சீமான், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நடிகர்  ராகவ் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

Actor ragav

இதுகுறித்து பதிவிட்ட அவர், "இராஜராஜ சோழன் ஒரு இந்து கிடையாது எனக்கூறுவது மகாத்மா, பாரதியார் யாரும் இந்தியர்களே இல்லை எனக் கூறுவதற்கு சமம். அவர்கள் பிறந்தபோது இந்தியா என்ற ஒரு நாடு உருவாகாததால், அவர்கள் அனைவரும் பிரிட்டிஷ் அரசின் குடிமகன்கள் என்று கூற முடியுமா?" என காரசாரமாக பதிலளித்துள்ளார்.