திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"ரஜினியின் கையில் அழகாக இருக்கும் இந்தக் குட்டிப் பையன் யார் தெரியுமா?!"
2003ம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய "சகானா" என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ராஜ்கமல். தொடர்ந்து ஆனந்தம், செல்வி, வசந்தம், கல்யாணம், பைரவி, அஞ்சரைப்பெட்டி உள்ளிட்ட தொலைகாட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
இதையடுத்து வெள்ளித்திரைக்கு வந்த ராஜ்கமல், 2006ம் ஆண்டு "பச்சக்குதிர" என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சரோஜா, நவீன சரஸ்வதி சபதம், லிங்கா, சண்டிக்குதிரை, மேல்நாட்டு மருமகன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ராஜ்கமல் சக சின்னத்திரை நடிகையான லதா ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இவர்களுக்கு ராகா, லாரா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வழக்கமாக திரைப் பிரபலங்களின் சிறு வயதுப் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வலம் வரும்.
அந்தவகையில் தற்போது ராஜ்கமலின் சிறுவயதுப் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சிறுவனாக இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் "யார் இந்த அழகான பையன்?" என்று ஆச்சர்யப்பட்டு வருகின்றனர்.