மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மறைந்த பவர் ஸ்டார் நடிகருக்கு வழங்கப்படும் மாபெரும் கெளரவம்.! தனிவிமானத்தில் பெங்களூரு சென்றடைந்தார் நடிகர் ரஜினி!!
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார் இவரை ரசிகர்கள் செல்லமாக பவர் ஸ்டார், அப்பு என அழைத்து வந்தனர். நடிகர் புனித் நடிப்பதோடு மட்டுமின்றி ஆதரவற்ற குழந்தைகளின், வறுமையில் வாடுபவர்களின் குழந்தைகளின் கல்விக்கு உதவுவது என பல சமூக சேவையாற்றியும் வந்தார்.
இலட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்த அவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 45 வயதில் இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் புனித் ராஜ்குமார் மறைவை தொடர்ந்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார்.
அதன்படி புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழா பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடப்பட்டது. இந்நிலையில், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் தனி விமானம் மூலம் பெங்களூரு சென்றடைந்தார். இவரை கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார்.