திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"அந்த படத்துல நடிக்கணும்னு அவ்ளோ ஆச., ஒரு சின்ன ரோல் கூட தரமாட்டேன்னு சொல்லிட்டாரு" - சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆதங்கம்..! ரசிகர்கள் தான் காரணமாம்..!!
இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரபு, சரத்குமார், நாசர் மற்றும் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா, அதிதி ராவ், திரிஷா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பல திரை பிரபலங்களும் பங்கேற்றனர். இதில் கலந்துகொண்ட ரஜினி, பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வேண்டும் என மணிரத்தினத்திடம் கேட்டதாக தெரிவித்தார். அவர் கூறியதாவது, "பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டராக நடிக்க வேண்டும் என மணிரத்தினம் கேட்டேன். ஆனால் மணிரத்தினம் உங்களுடைய ரசிகர்களிடம் என்னால் திட்டுவாக இயலாது என்று அதனை மறுத்துவிட்டார்" என கூறினார்.
மேலும் "பிரபல பத்திரிகை ஒன்றில் ஒரு வாசகர் பொன்னியின் செல்வன் இப்பொழுது எடுத்தால் வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார்? என்று கேட்டிருந்தார். அதற்கு ஜெயலலிதா அவர்கள், ஒரே வரியில் "ரஜினிகாந்த்" என்று எழுதியிருந்தார்கள். இதைக் கேட்டவுடன் எனக்கு ஒரே குஷி ஆகிடுச்சு.
அதற்கு பின்தான், நான் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்க தொடங்கினேன். இதைகேட்ட பின்னர்தான் பொன்னியின் செல்வன் படத்தில் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்ற ஆசையும் எனக்கு உண்டானது. ஆனால் மணிரத்தினம் தனது ரசிகர்களை காரணம் காட்டி, சின்ன ரோல் கூட தராமல் மறுத்தது எனக்கு வருத்தமாக உள்ளது" என்று தனது ஆதங்கத்தை ரஜினிகாந்த் வெளிப்படுத்தினார்.