திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடச்சீ... 100 பேர் முன்பு கூட நிர்வாணமாக நிற்க முடியுமாம்... வைரலாகும் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஹூட்!!
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் தற்போது பேப்பர் என்ற இதழுக்காக நிர்வாண போஸ் கொடுத்து போட்டோ ஹூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
ரன்வீர் சிங் தனது ஃபேஷன் ஷோவில் பெயர் பெற்றவர். ஃபேஷனை வித்தியாசமாக எக்ஸ்ப்ளோர் செய்ய விரும்புவர். அதற்காக நீளமான ஸ்கர்ட்டுகள், பாவடை தாவணி, வித விதமான கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் உடைகள் என, எப்போதும், பேசுபொருளாக இருக்கிறார். மேலும், அவர் அணியும் சில ஆடைகள், அவரது மனைவி தீபிக்காவுடையது என்றெல்லாம், பலர் கேலி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
பிரபல சர்வதேச பதிப்பான தி பேப்பர் மேகசீனின் கவர் பிக்-குக்காக ரன்வீர் சிங் நிர்வாண போஸ் கொடுத்து போட்டோ ஹூட் நடத்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அமெரிக்காவில் இன்று முன்னணி பிரபலங்களில் ஒருவராக இருக்கும் கார்டேஷியன்களைப் போல, ரனிவீரும் ஆக முயற்சி செய்கிறார் என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்.
இது குறித்து ரன்வீர் பேசும்போது, "நான் 100 பேர் முன்பு கூட நிர்வாணமாக நிற்பேன். அது குறித்து எள்ளளவும் நான் கவலைப்பட்டதில்லை. ஆனால், சிறிது நேரம் கழித்து அங்கிருப்பவர்களுக்கும் பழகி விடும்" என்று கூறினார். அவரின் இந்த பதிலுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
.@RanveerOfficial: the Last Bollywood Superstar https://t.co/mMuFPyFP44 pic.twitter.com/eQkD3baj17
— Paper Magazine (@papermagazine) July 21, 2022