மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"தீபிகாவின் கணவராக நடிக்க சம்பளம் வேண்டாம்" நடிக்க சம்பளம் வாங்க மறுத்த நடிகர்..
பாலிவுட்டின் பிரபல முன்னணி நட்சத்திர ஜோடிகள் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். மேலும் இவர்கள் இருவரும் ராம்லீலா, பத்மாவத் உள்ளிட்ட ஏராளமான படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
மேலும் ரன்வீர் கதாநாயகனாக நடித்த 'சர்க்கஸ்', '83' உள்ளிட்ட படங்களில் தீபிகா படுகோனே சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். அதே போல் தீபிகா படுகோனே நடித்த "பைண்டிங் பேன்னி" என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் ரன்வீர் சிங் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.
தீபிகாவின் கணவராக வெறும் ஐந்து நிமிடங்கள் வரும் காட்சியொன்றில் ரன்வீர் சிங் நடித்திருப்பார். இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஹோமி அடாஜானியா, "ரன்வீர் சிங் எனக்கு மிகவும் நல்ல நண்பர். இந்தப் படத்தில் அவரது கதாப்பாத்திரம் இறந்துவிடும்.
தீபிகாவின் கணவராக வரும் அந்த ஐந்து நிமிடக் காட்சிக்காக ரன்வீர் எங்களுடன் அரை நாள் கோவாவில் இருக்க வேண்டும் என்று அவரிடம் கூறினேன். இதற்காக சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த ரன்வீர் மேலும் ஒரு வாரம் எங்களுடன் கோவாவில் தங்கியிருந்து சென்றார்" என்று கூறியுள்ளார்.