மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நுரையீரல் புற்றுநோய்! நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி! கண்ணீர் மல்க விடுத்த வேண்டுகோள்!
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோய் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் சஞ்சய் தத்திற்கு கடந்த வாரம் நுரையீரலில் புற்றுநோய் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவருக்கு புற்றுநோய் மூன்றாவது கட்ட நிலையில் உள்ளதால், அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதாக தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் சஞ்சய் தத் நேற்று இரவு சிகிச்சைக்காக மும்பை தனியார் மருத்துவமனையில் உள்ள புற்றுநோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் நடிகர் சஞ்சய் தத் தமது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களை சந்தித்து கண்ணீர் மல்க தான் நலம் பெற பிரார்த்தனை செய்யுமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்து விடைபெற்றுள்ளார். இந்நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.