திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"அதிரடி ஆக்சனிலும் காமெடி கதை பண்ணலாம்" - சந்தானத்தின் பிளாக்பஸ்டர் ஹிட் ரெடி.. இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரைலர் இதோ.!
ஜிஎன் அன்புசெழியன் தயாரிப்பில், ஆனந்த் நாராயணன் இயக்கத்தில், டி..இமான் இசையில், நடிகர்கள் சந்தானம், பிரியாலையா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பாலா சரவணன், முனீஷ்காந்த், அதுல், மாறன், சேசு, ஸ்வாமிநாதன், மனோபாலா, கூல் சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் இங்க நான்தான் கிங்கு (Inga Naan Thaan Kingu).
இப்படம் வரும் மே மாதம் 10ம் தேதி கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகிறது. சந்தானம் ரசிகர்கள் நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்த சிரிப்பு அலையை ஏற்படுத்தும் படத்தில், ஆக்சன் கதையம்சம் கொண்ட படம் ஒன்றில் அவர் நடித்துள்ளது தற்போது வெளியாகியுள்ள டிரைலரின் வாயிலாக உறுதியாகியுள்ளது.
சிம்பு, விஷால், ரன்பீர் கபூர், நயன்தாரா ஆகியோரை நேரடியாக கலாய்த்தும் காமெடி வைத்துள்ள படக்குழு, ஒவ்வொரு காட்சிகளையும் ரசிக்கும் வகையில் செதுக்கி இருக்கிறது. பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் உள்ள டயலாக்கை போல, ஐந்தாறு பிகர் வைத்துவிட்டு சுற்றும் 2 கே கிட்ஸ் மற்றும் 90 கிட்ஸ் குறித்த டயலாக்கும் இடம்பெற்றுள்ளது.
ட்ரைலர் வீடியோ உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது: