மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ... என்ன ஆச்சு!! திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சரத்குமார்... ரசிகர்கள் ஷாக்!!
தமிழ் சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சரத்குமார். இவர் நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
தற்போது மீண்டும் வெப்சீரிஸ், படங்களில் என தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகர் சரத்குமாருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக நடிகர் சரத்குமார் தரப்பினர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதாவது நடிகர் சரத்குமார் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கிறாராம். மேலும் அவர் பூரண நலமுடன் சென்னை வந்து கொண்டிருக்கிறார் என தெரிவித்து இருக்கின்றனர். இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.