மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் அவருக்காகதான் படத்தில் நடிக்க ஓகே சொன்னேன்.! ஓ மை கோஸ்ட் படம் குறித்து நடிகர் சதீஷ் கூறியதை பார்த்தீங்களா!!
பாலிவுட் சினிமாவில் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து இளைஞர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று பெரும் பிரபலமாக இருப்பவர் சன்னி லியோன். அவர் தற்போது கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சன்னி லியோன் நடிப்பில் தற்போது உருவாக்கியுள்ள திரைப்படம் ஓ மை மை கோஸ்ட். இந்த படத்தை யுவன் இயக்கியுள்ளார்
ஹாரர் கலந்த காமெடி படமான இதில் சதீஷ், தர்ஷா குப்தா, தங்கதுரை, சஞ்சனா, யோகி பாபு, ஜிபி முத்து, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே. சசிகுமார் மற்றும் வீரசக்தி ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்நிலையில் இதன் ட்ரைலர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றுள்ளது.
அப்பொழுது பேசிய நடிகர் சதீஷ், இந்தப் படத்தில் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் சன்னி லியோன் நடிக்கிறார் என தெரிந்ததும் உடனே நான் இதில் நடிக்க ஒத்துக்கொண்டேன். சன்னி லியோன் சிறந்த மனிதநேயமிக்க நபர். முதலில் அவரை நெருங்க ரொம்ப தயங்கினேன். ஆனால் அவர் மிகவும் சாதாரணமாகவே எங்களிடம் பழகினார். இந்த படத்திற்காக நாங்கள் அதிகம் உழைத்துள்ளோம். இப்படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.