மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தை இல்லை என கதறிஅழுத நடிகர் சென்ராயனின் மகன்களை பார்த்துருக்கீங்களா! நல்லா வளந்துட்டாங்களே! கியூட் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் வில்லன் முதல் காமெடி கதாபாத்திரம் என சிறு கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் சென்ராயன். இவர் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் .அவர் நிகழ்ச்சியில் இருந்தபோது தனக்கு குழந்தை இல்லை என கதறி அழுதார். அது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.
இந்த நிலையில் ஆச்சரியத்தின் உச்சமாக FREEZE டாஸ்கில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சென்ட்ராயனின் மனைவி தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை கூறி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். சந்தோஷத்தில் சென்ராயன் துள்ளிக் குதித்து அங்குமிங்கும் ஓடி நான் அப்பாவாகிட்டேன் என கண்கலங்கியது பார்ப்போரை நெகிழ வைத்தது.
இந்த நிலையில் நடிகர் சென்ராயனுக்கு தற்போது இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் நன்கு வளர்ந்து செம க்யூட்டாக உள்ளனர். இந்த நிலையில் நடிகர் சென்ராயன் குடும்பத்துடன் இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட ரசிகர்கள் சென்ராயன் மகன்கள் நன்கு வளர்ந்துவிட்டனர் என கூறி வருகின்றனர்.