திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அப்படிப்போடு.. ரஷிய மொழியில் வெளியாகிறது பதான் திரைப்படம்; கொண்டாட்டத்தில் ஷாருக்கான் ரசிகர்கள்.. வாரிக்குவிக்கப்படும் வசூல்.!
கடந்த ஜனவரி மாதம் ஷாருக்கான், தீபிகா படுகோன், சல்மான் கான், ஜான் ஆப்ரஹாம், க்ரித்திக் ரோஷன், ஏக்தா கவுல் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் பதான். ரூ.225 கோடி பட்ஜெட்டில் உருவான திரைப்படம், ரூ.1000 கோடியை தாண்டி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான பதான் திரைப்படம், இந்திய உளவுத்துறை சார்ந்த கதைக்களம் கொண்டது. ஷாருக்கானின் அட்டகாசமான ஆக்சனில் படம் அமோக வரவேற்பு பெற்றது.
இந்நிலையில், ஷாருக்கானின் பதான் திரைப்படம் ரஷியா மற்றும் 12 காமன்வெல்த் சுதந்திர நாடுகளிலும் (ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உக்ரைன் மற்றும் உஸ்பெகிஸ்தான்) வெளியாகிறது.
பதான் திரைப்படம் அங்கிருக்கும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் ரஷிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கைதி திரைப்படமும் சமீபத்தில் ரஷிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியானது.
இதற்கிடையில் பதான் திரைப்படம் தற்போது ரஷ்யாவில் வெளியாகிறது. ரஷிய திரைப்பட விரும்பிகளின் இந்திய படங்களின் மீதான மோகம் சமீபமாகவே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
A larger-than-life spectacle with high-octane action sequences.
— Yash Raj Films (@yrf) July 13, 2023
Watch #Pathaan (Russian Dubbed Version) now in cinemas across Russia and CIS! #YRFInternational pic.twitter.com/s5WbqnlArS