திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
# | Breaking | பிரபல நடிகர் ஷாருக்கான் விபத்தில் சிக்கினார்.!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன ஷாருக்கான் அமெரிக்காவில் நடைபெற்ற திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த விபத்து தொடர்பாக அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பாலிவுட் நடிகரான ஷாருக்கான் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒன்றில் ஈடுபட்டு வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தினால் அவரது மூக்கில் காயம் ஏற்பட்டு இரத்தம் வடிந்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூக்கில் சிக்கிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து சிறிய ஓய்வுக்கு பின் மீண்டும் அவர் மும்பைக்கு திரும்பி உள்ளதாகவும் தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு ஏற்பட்ட விபத்து பாலிவுட் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.