மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இருட்டு அறையில், முரட்டுத்தனமா நடனமாடிய நடிகை ஷெரின்! வைரல் வீடியோ இதோ...
நடிகை ஷெரின் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ ஒன்று செம வைரலாகி வருகிறது.
துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை ஷெரின். அதனை தொடர்ந்து அவர் ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில், உற்சாகம், பீமா போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பை அடுத்து கன்னடம், மலையாளம் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார் அம்மணி.
ஒருகாலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த இவர், புதுமுக நடிகைகளின் வரவால் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்தார். இந்த நிலையிலில்தான் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியில் மிகவும் போராடி போட்டியின் இறுதிவரை சென்று நான்காவது பரிசை தட்டி சென்றார். இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம்உருவானது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் குண்டாக இருந்த நடிகை ஷெரின் தற்போது உடல் எடையை குறைத்து அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு மிக ஒல்லியாக மாறியுள்ளார். மேலும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக இருந்துவரும் இவர், தற்போது இருட்டு அறையில் மிகவும் வித்தியாசமாக நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.