மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தம்மா துண்டு வயசுலேயே லவ்வா.? சிவகார்த்திகேயனும், அவரோட மனைவியும் சேர்ந்து இருக்கும் சிறு வயது புகைப்படம்.!
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் கதாநாயகராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் பொறுப்பாளராக தனது பணியை தொடங்கிய இவர் இன்று தமிழ் சினிமாவின் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.
தற்போது இவரது நடிப்பில் மாவீரன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் நடித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து அயலான் என்ற சயின்ஸ் பிக்சன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தீனா முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இணையதளத்தில் அவ்வப்போது ரசிகர்களின் சிறுவயது புகைப்படங்கள் வெளியாகும். அதேபோன்று இவரது புகைப்படமும் அவ்வப்போது வெளியாகிறது.
தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவியின் குழந்தை பருவ புகைப்படம் வெளியாகியிருக்கிறது. சிவ கார்த்திகேயன் அவரது உறவுக்கார பெண்ணைத்தான் திருமணம் செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் ஒன்றாக சுற்றுலா சென்ற போது எடுத்த போட்டோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.