மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடடே.. கவிதை பொங்குதே.! மனம் திறந்து அதிதியிடம் காதலை வெளிப்படுத்திய சித்தார்த்.!
தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் முதன் முதலில் 'பாய்ஸ்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
முதல் படமே இவருக்கு பெயர் பெற்று தந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகராக பெயர் பெற்றிருக்கிறார் சித்தார்த்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சித்தா எனும் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்றது . இதே நிலையில் சித்தார்த் பிரபல நடிகை அதிதி ராவை காதலிப்பதாக இணையத்தில் அடிக்கடி செய்திகள் பரவி வந்தன.
இதனை அடுத்து தற்போது அதிதி ராவின் பிறந்த நாளையொட்டி, நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் காதலை வெளிப்படுத்தி பார்ட்னர் என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இப்படிவை பார்த்து ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.