மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது..கார்த்தி பட நடிகையுடன் காதலில் விழுந்தாரா சித்தார்த்.! அவரே வெளியிட்ட புகைப்படத்தால் கன்ஃபார்ம் செய்த ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகர் சித்தார்த். அதனைத் தொடர்ந்து அவர் 180, உதயம் என்.எச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா, காவியத் தலைவன், அருவம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.
சித்தார்த் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வபோது சமூக அநீதிகளுக்கு எதிராகவும், அரசியல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாகவும் கூறுவார். மேலும் இதனால் பல சர்ச்சைகளிலும் சிக்குவார். இந்த நிலையில் கடந்த சில காலங்களாக நடிகர் சித்தார்த் நடிகை அதிதி ராவ் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவி வந்தது.
இந்நிலையில் நடிகர் கார்த்தியுடன் காற்று வெளியிடை படத்தில் நடித்த நடிகை அதிதி இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். சித்தார்த் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அதில் தனது இதயராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனவும் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் இருவரும் காதலிப்பது உண்மைதானோ? என கமெண்ட் செய்து வருகின்றனர்.