மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"சித்தார்த் - அதிதி ராவ் காதல் உறுதியா?" சித்தார்த் டிவீட்டால் குழப்பத்தில் ரசிகர்கள்!
இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்தவர் சித்தார்த். தொடர்ந்து ஷங்கரின் "பாய்ஸ்" படத்தில் அறிமுகமானார். தயாரிப்பாளராகவும், பாடகராகவும் உள்ள சித்தார்த், சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
அதே போல் 2007ம் ஆண்டு "சிருங்காரம்" என்ற படத்தில் தமிழில் அறிமுகமானவர் அதிதி ராவ். ஹைதராபாத்தில் அரச வம்சாவளிக் குடும்பத்தில் பிறந்த இவர், தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சித்தார்த் - அதிதி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங் செய்து வருவதாக தகவல் பரவியது. அதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த அக்டோபர் 28ஆம் தேதி அதிதியின் பிறந்தநாளுக்கு, அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார் சித்தார்த்.
அதில் "அன்புத் துணைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது சித்தார்த் தனது புதிய படத்தின் பிரமோஷனுக்காக நடனம் ஆடியதைப் பார்த்த அதிதி, "அருமையான நடனம்" என்று கூறியுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் "இது காதல் தானா?" என்று குழம்பி வருகின்றனர்.