மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சித்தா பட ப்ரமோஷனுக்காக பாக்கியலட்சுமியின் வீட்டிற்கு வந்த சித்தார்த்: இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
குணால் தேஷ்முக் இயக்கத்தில், சித்தார்த், திவ்யன்ஷா, அபிமன்யு, சுஜிதா, யோகிபாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். இப்படத்தின் ப்ரமோஷனுக்கு கர்நாடகா சென்ற சித்தார்த், அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கு கன்னட திரையுலகம் மன்னிப்பு கேட்டுள்ளது.
இந்நிலையில், சித்தா திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் சித்தார்த் பாக்கியலட்சுமி தொடரில் தோன்றி இருக்கிறார். அமிர்தாவின் குழந்தை இனியாவுடன் விளையாடியபோது திடீரென மாயமாகிவிட, அவரை குடும்பமே தேடுகிறது.
அப்போது, சித்தார்த் தோன்றி குடும்பத்தினருடன் பேசி சித்தா பட ப்ரமோஷன் செய்கிறார். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் வந்து சித்தா படம் பார்க்குமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.