திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் சித்தார்த்தின் மனைவி தூக்குபோட்டு தற்கொலை!.
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த பிரபல சினிமா நடிகரின் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
யாகாவராயினும் நாகாக்கா உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகர் சித்தார்த். இவருக்கும், ஸ்மிரிராஜா என்பவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இருவரும் சென்னை மதுரவாயலில் வசித்துவந்தனர்.
தமிழ் ரசிகர்களால் கவரப்பட்ட இந்த படத்தில் பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி முதன்முறையாக நடித்திருந்தார். நடிகர் ஆதி ஹீரோவாக நடித்த அந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகர் சித்தார்த்.
இந்நிலையில், நேற்று நடிகர் சித்தார்த் மற்றும் இவரது மனைவி இருவருக்குள்ளும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தனியாக அறையில் சென்று படுத்துக்கொண்ட நடிகர் சித்தார்த்தின் மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவம் அறிந்த போலீசார் நடிகர் சித்தார்த் வீட்டிற்கு சென்று ஸ்மிரிராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதனையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.