திருமணம் வாழ்க்கையையே மாற்றும்., வெற்றியை மட்டுமே கொண்டு வரும் - மனம் திறந்த நடிகர் சிவகார்த்திகேயன்..!!



Actor Siva karthikeyan about his marriage life


தமிழ் திரையுலகில் குழந்தைகளுக்கு பிடித்த நட்சத்திரமாக இருந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக நுழைந்து பின்பு அதே தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளில் பணியாற்றினார்.

பின் திரையுலகத்திற்கு அறிமுகமாகி தற்போது உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் ஆகஸ்ட் 16, 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.

Siva Karthikeyan

அவர் பேசுகையில், "ஒவ்வொருவரின் வாழ்க்கையில் திருமணம் என்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும். அது கூடுதலாக ஒரு பொறுப்பு. நான் என் மனைவி ஆர்த்தியை திருமணம் செய்த பின்னர், எனக்கென தனி ஷோ கிடைத்தது. 

திருமணத்திற்கு பின்னர் வாழ்க்கை என்பது மாறும். அது வெற்றி பயணத்தை கட்டாயம் கொண்டு சேர்க்கும்" என்று தெரிவித்தார்.