மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரபல காமெடி நடிகர் சிவ நாராயண மூர்த்தி திடீர் உடல் நலக்குறைவால் மரணம்... சோகத்தில் திரையுலகினர்...
தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடியானாக நடித்து பிரபலமானவர் சிவ நாராயண மூர்த்தி. இவர் விவேக் மற்றும் வடிவேல் போன்ற காமெடி ஜாம்பவான்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.
இவர் இதுவரை 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் காமெடி காட்சிகளில் மட்டும் நடித்துள்ளார். 67 வயதாகும் சிவ நாராயண மூர்த்தி திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு நேற்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார்.
இவருக்கு 2 ஆண்,1 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரின் இறுதி சடங்கு நிகழ்வுகள் அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் இன்று மதியம் 02.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதனிடையே, ஊர் மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.சிவ நாராயண மூர்த்தியின் மறைவு தமிழ் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.