மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. இவரா! இந்தியன் 2 படத்தில் கமலுக்கு மெயின் வில்லன் யார் தெரியுமா? கசிந்த பக்கா சீக்ரெட்!!
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்த திரைப்படம் இந்தியன். இதில் உலக நாயகன் கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த நிலையில் இந்தியன் படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து 25 வருடங்களுக்குப் பிறகு தற்போது இந்தியன் 2ஆம் பாகம் உருவாகி வருகிறது.
இதில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியன் படத்தில் வில்லனாக நடிக்க இருப்பவர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை படக் குழுவினர்கள் ரகசியமாக வைத்திருந்த நிலையில் தற்போது தகவல் கசிந்துள்ளது. இயக்குனர் மற்றும் ஹீரோவாக வலம் வந்த எஸ்.ஜே சூர்யா தற்போது மிரட்டலான வில்லனாகவும் மிரள வைத்து வருகிறார். இவர் இதற்கு முன்பு ஸ்பைடர், மெர்சல், மாநாடு, டான் ஆகியப் படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்துள்ளார்.