மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கவிஞர் சிநேகன் மனைவியின் புது பிஸினஸ்.. கடுப்பான நெட்டிசன்கள்.. காரணம் இதுதான்.!
கவிஞர் சினேகன் தன்னுடைய மனைவி கனிகாவுடன் சேர்ந்து புதிய ஹெர்பல் ஆயில் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதன் விலை மிக அதிகமாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகை கன்னிகா பாடல் ஆசிரியரான சினேகனை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர், நடிப்பதில் இருந்து விலகி youtube சேனல் ஒன்றை நடத்தி வருகின்றார். சமூக வலைதள பக்கத்திலும் அவர் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். தற்போது அவர் ஒரு புது பிசினஸை கையில் எடுத்துள்ளார். கணவரும் அவரும் சேர்ந்து ’சினேகம் ஹெர்ப்ஸ்’ எனும் பெயரில் ஒரு ஹேர் ஆயில் நிறுவனத்தைத் துவங்கியுள்ளனர். இயற்கை முறையிலான ஒரு தயாரிப்பு என இதை அவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இது குறித்து இருவரும் சமூக வலைதள பக்கத்தில் விளம்பரப்படுத்தி இருந்த நிலையில் அந்த பொருட்கள் மீது சமூக வலைதள ரசிகர்கள் விமர்சனத்தை வைத்துள்ளனர்.
அதாவது அந்த ஹேர் ஆயில் 200மி.லி ரூ.999 என்று இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்து, "இது மிடில் கிளாஸ் குடும்பத்திற்கு ஒத்து வராது. எனவே அதற்கு ஏற்றார் போல விலையை குறைத்து விற்பனை செய்யுங்கள்." என்று கமெண்ட் போட்டு வருகின்றனர். ஏற்கனவே திரை பிரபலங்களான சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் தனித்தனியே பிசினஸ் செய்து வரும் நிலையில் அவர்களுக்கு போட்டியாக இவர் பிசினஸ் ஆரம்பித்து இருப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால், அவர்களே விலை குறைவான பொருட்களை விற்கும்போது இவர் இவ்வளவு விலை அதிகமான பொருளை விற்பனை செய்வது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.