மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதியவரின் 12 லட்சம் ரூபாய் கடனை அடைத்த சோனு சூட்.. பாராட்டி தள்ளும் ரசிகர்கள்.!
பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் மக்கள் நலப் பணிகளிலும், சமூக சேவைகளை செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அந்த வகையில் இவர் கொரோனா காலகட்டத்தில் பலருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் தனது மனைவியின் மருத்துவ செலவுக்காக வாங்கிய 12 லட்சம் ரூபாய் கடன் நாள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்.
ஆனால் முதியவரின் மனைவி சமீபத்தில் இறந்துவிட்ட நிலையில் மேலும் மனமுடைந்து போன முதியவர் நடிகர் சோனு சூட்டை அணுகி உதவி கேட்டுள்ளார்.
இதனைக் கேட்டு மனமிரங்கிய நடிகர் சோனு சூட் உடனடியாக 12 லட்சம் ரூபாய் கொடுத்து கடனை அடைக்க உதவி செய்துள்ளார். தற்போது இவருடைய இந்த சேவைக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.