மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Video: சிக்ஸ்பேக் வைக்க மாஸாக உடற்பயிற்சி செய்யும் சூரி..! மீண்டும் தரமான சம்பவம்?. கலக்கல் வீடியோ வைரல்..!
கோலிவுட்டில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் நடிகர் சூரி. இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தில் 50 பரோட்டா சாப்பிட வேண்டும் என்ற போட்டியின் மூலம் காமெடி செய்து பிரபலமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து போராளி, சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ஜில்லா மற்றும் சீமராஜா போன்ற படங்களிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் இறுதியாக டான் மற்றும் விருமன் போன்ற படங்களில் நடித்திருந்ததை தொடர்ந்து, விடுதலை என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகர் சூரி வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக் வைக்க முயற்சித்து வருவதாக தெரிய வருகிறது.
முன்னதாகவே சிவகார்த்திகேயனுடன் நடித்த "சீமராஜா" திரைப்படத்திற்காக சூரி சிக்ஸ்பேக் வைத்த நிலையில், தற்போது மீண்டும் அதற்கான முயற்சியை எடுத்து வருகிறார். இந்த வீடியோவில் தனது முகத்தை காட்டாமல் அவர் உடற்பயிற்சி செய்வது மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.