மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"உங்களை பற்றி அவதூறு சொல்பவர்களை கண்டுகொள்ளாதீர்கள்" - நடிகர் சூர்யா வேறலெவல் அட்வைஸ்.!
பழம்பெரும் நடிகர் சிவகுமார், கடந்த 1979ம் ஆண்டில் தனது 100 படவெளியீட்டின் போது சிவகுமார் கல்வி அறக்கட்டளையை தொடங்கினார். அதனை எம்.ஜி.ஆர் தொடங்கி வைத்தார். அன்றில் இருந்து கல்விக்கு பல உதவிகளை சிவகுமார் கல்வி அறக்கட்டளை வழங்கி வந்தது.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் சிவகுமார் கல்வி அறக்கட்டளையை பயின்று வரும் மாணவர்கள் 25 பேரின் மேல் படிப்புக்கு நடிகர் சூர்யா நிதிஉதவி வழங்கினார். பெற்றோரை இழந்த 12ம் வகுப்பு மாணவர்களின் மேல் படிப்புக்கு நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின்போது நடிகர் சூர்யா பேசுகையில், "மக்கள் எதிர்மறை கருத்துக்களை தவிர்க்க வேண்டும். அவதூறாக பேசுபவர்களையும், எதிர்கருத்துகள் தெரிவிப்போரையும் கண்டுகொள்ளாமல் விட வேண்டும். ஒருவர் அவதூறாக எதையும் பேசினால், அவர்களிடம் விவாதம் செய்யாமல் ஒதுக்கிவிட வேண்டும்.
நமது அகரம் பவுண்டேசன் உதவியுடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவம் பயின்ற மாணவர், இன்று உலக சுகாதார அமைப்பில் வேலை பார்த்து வருகிறார். நான் நமது மாணவர்களிடம் இருந்து பல நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டு இருக்கிறேன்" என பேசினார்.