நடிகர் சூர்யா, அஜித் குடும்பத்தினர் ஒரே இடத்தில் கலகல சந்திப்பு! வைரலாகும் புகைப்படங்கள்...



Actor Surya and ajith family photos

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அஜித். இவருக்கென நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி. இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்தபோது ஒருவருக்கொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்களுக்கு தற்போது அனோஷ்கா, ஆத்விக் என இரு பிள்ளைகள் உள்ளனர்.

Ajith

 

அதேபோல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர்  சூர்யா. இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகர்கள் சூர்யா மற்றும் அஜித் இருவரும் தங்களது மகள்கள் மற்றும் குடும்பத்துடன் ஒன்றாக சந்தித்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி அந்த புகைப்படத்தை தற்போது சூர்யா மற்றும் அஜித் ரசிகர்களுக்கிடையே பெரும் வைரலாகி வருகிறது. இதோ  அந்த புகைப்படம்...

Ajith