மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நம்ம சூர்யா, கார்த்தி தங்கையை பார்த்தீங்களா?.. சினிமாவிற்கு முதல்தடவை., ஆனா வேறலெவல் என்ட்ரி..! பான் இந்தியலெவெல் படத்தில் இணைந்துள்ளாராம்..!!
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக களமிறங்கி கலக்கி வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகின்றனர். இவர்களின் தங்கை பிருந்தா இதுவரையிலும் படிப்பு, குடும்பம் என்று செட்டிலாகியிருந்த நிலையில், தற்போது சினிமா துறையில் களமிறங்கி இருக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு படத்திற்கு பாடல் பாடியிருந்தார்.
இதனை தொடர்ந்து இவர் பான் இந்தியா படத்தில் களமிறங்கியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. சமீபத்தில் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்த திரைப்படம் பிரம்மாஸ்திரா. இப்படம் ஆலியா பட் - ரன்வீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ளதை தொடர்ந்து, இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியிருந்தார். இப்படத்தில் மௌனி ராய், அமிதாப்பச்சன், நாகார்ஜூனா போன்ற பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.
இந்த நிலையில், இப்படத்தின் தமிழ் வெர்ஷனில் நடிகை ஆலியா பட்க்கு, பிருந்தா டப்பிங் கொடுத்திருக்கிறார் என்ற தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது குறித்து பிருந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த அவருடைய சகோதரர்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், திரைப்பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.