மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாலிவுட்டில் ஹீரோவாகும் சூர்யா.? எந்தப் படத்தில் தெரியுமா..
1997ம் ஆண்டு "நேருக்கு நேர்" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சூர்யா. தொடர்ந்து நந்தா, பிதாமகன், காக்க காக்க, பேரழகன், ஏழாம் அறிவு என்று பல வெற்றிப்படங்களில் ஹீரோவாக நடித்து, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கிறார்.
சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதை மூன்று முறை பெற்றுள்ளார். 4 பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ள சூர்யா, 2006ம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
தற்போது சூர்யா, சிறுத்தை சிவா இயக்கத்தில், "கங்குவா" படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிவடைந்துள்ள நிலையில், சுதா கெங்கரா இயக்கத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களிடம் ஜோதிகா கதை கேட்டு வருவதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. எனவே சூர்யா நேரடியாகப் பாலிவுட் படத்தில் நடிக்க போவதாகத் தெரிய வந்துள்ளது. சமீப காலமாக சூர்யா அடிக்கடி மும்பையில் சென்று தங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.