மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆத்தி.. நடிகர் சூர்யா இப்படில்லாம் பன்றாரா?.. நம்பவே முடியல..! மாசம் ரூ.20 கோடி வருதாமே..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் சூர்யா. இவர் தனது திரைபயணத்தில் தொடர்ந்து பல முக்கிய திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளார். மேலும் சமீபத்தில் நடிகர் சூர்யா நடித்த "சூரரைப் போற்று" திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனை அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக நட்சத்திரங்களும் கொண்டாடினர். இந்த நிலையில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா வணங்கான் என்ற திரைப்படத்தில் நடித்து வருவதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது வனங்கான் திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இதனால் சூர்யா இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா42 என்ற படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் சூர்யா மும்பையில் உள்ள வெல்த் மேனேஜ்மென்ட் மூலம் பல தொழில்களில் முதலீடு செய்திருப்பதாகவும், இதனால் தான் அவ்வப்போது மும்பை சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.
சூர்யா மும்பையில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.200 கோடியளவில் முதலீடு செய்வதாகவும் அதில் அவருக்கு மாதந்தோறும் ரூ.20 கோடி வருமானம் கிடைப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல்கள் உண்மையா?, இல்லையா? என்பது தெரியவில்லை. ஆனால் நடிகர் சூர்யா அகரம் அறக்கட்டளை மூலமாக பலருக்கும் பல உதவிகளை செய்துவருவது குறிப்பிடத்தக்கது.