மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"தமிழக முதல்வருக்கு நன்றி" நடிகர் சூர்யாவின் வைரலாகும் பதிவு..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பெயர் பெற்றவர் சூர்யா. இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை அளித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டியுள்ளார். தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து முன்னணி நடிகராக வலம் வருகிறார் சூர்யா.
இது போன்ற நிலையில், சூர்யா நடிப்பில் ஞானவேல் ராஜா இயக்கத்தில் 2021 ஆம் வருடம் வெளியான திரைப்படம் 'ஜெய் பீம்' உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி பலரும் இப்படத்தை பாராட்டி வந்தனர. தமிழக அரசு சார்பில் விருதும் கிடைத்தது.
இதனை அடுத்து அப்படத்தில் காட்டப்பட்டிருக்கும் தாழ்த்தப்பட்ட சமூக்தைச் சார்ந்த மக்களுக்கு அரசு தரப்பிலும், பொதுமக்கள் தரப்பிலும் பலவிதமான உதவிகள் கிடைத்தது. இப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். இப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. எத்தனை வருடங்கள் ஆனாலும் ஜெய் பீம் திரைப்படத்தை மறக்க முடியாது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்