#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சாப்பாட்டுக்கே வழியில்லை! ஊரடங்கில் உதவி கேட்டு பிரபல நடிகர் வெளியிட்ட உருக்கமான வீடியோ!
தமிழ் சினிமாவில் தூரல் நின்னு போச்சு என்னும் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாதுறையில் அறிமுகமானவர் சூர்யகாந்த். இதனைத் தொடர்ந்து அவர் துணை கதாபாத்திரத்திலும், வில்லன் நடிகராகவும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜாவின் மண்வாசனை, கிழக்குச் சீமையிலே மற்றும் சமீபத்தில் கார்த்தியின் கைதி, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் திரைப்படங்களில் நடிக்கும் துணை நடிகர்கள் ஏராளமானோர் வருமானமின்றி பெருமளவில் பாதிக்கபட்டுள்ளனர்.
இந்நிலையில் மிகவும் கஷ்டத்தில் இருக்கும் நடிகர் சூர்யகாந்த் உதவி கேட்டு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், கொஞ்ச நாளாக ஷூட்டிங் இல்ல, சீரியல் ஷூட்டிங்கும் சரியாக நடக்கவில்லை. அதனால் பொருளாதார ரீதியாகவும், சர்க்கரை நோய் பாதிப்பு போன்ற உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். மருந்து வாங்கவே ஒரு மாதத்திற்கு 1500 ரூபாய் செலவாகிறது. நான் இப்போ சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாம இருக்கேன் தயவுசெய்து உதவுங்கள் என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.